பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கன்பூசியஸின்


ஓடி ஓடி அலுத்துப்போன கன்பூசியஸ், இந்த உலகத்தை தம்மால் திருத்த முடியாது’ என்ற விரக்தியால், மீண்டும் மாணவர்கள் மத்தியிலே ஞான குருவாகப் போதனையைச் செய்யத் துவங்கி விட்டார். இவ்வளவு மனவிரக்திக்குப் பிறகும் கூட, அவர் அரசியல் துறையைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா!

ஒரு நல்ல ஆட்சிக்கு முக்கியமானவை மூன்று; ஏராளமான உணவு, போதுமான படைபலம்; பொதுமக்களின் ஒட்டுமொத்தமான நம்பிக்கை, இவற்றில் மக்களது நம்பிக்கைதான் உயிர்நாடி. அது இல்லாவிட்டால் அரசே நடவாது; இராது என்கிறார்.

ஒரு நாட்டை ஆள்பவன் பொருளாதாரப் பற்றாக் குறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் அரசு வருவாய் பணம்; சரியாகப் பங்கிட்டு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தான் பார்ப்பான்! வறுமையை அவன் பொருட்படுத்த மாட்டான். அதன் நிலையற்றத் தன்மையைத்தான் பொருட்படுத்துவான்! சரியான பங்கீடு இருந்தால் வறுமை வராது; ஒற்றுமை உணர்விருந்தால் மக்களிடமிருந்தும் பற்றாக் குறைபற்றி புகார் வராது. உள்ளத் திருப்தி இருந்தால் புரட்சியே தோன்றாது என்று குறிப்பிடுகிறார்.

ஆட்சி செய்வோர் மக்களது நம்பிக்கையை இழந்து விடுவார்களானால்; அந்த ஆட்சியை மக்களே அகற்றி விரட்டிவிடுவார்கள்.

வானகத்து விதி முறைகளுக்கு ஏற்றவாறு மக்களின் பொது நலத்தை வளர்ப்பதுதான் ராஜ்ஜியத்தின் ஒரே நோக்கம். ராஜ்யம் என்பது, மக்களின் விவகாரமே தவிர, ஆள்வோர்களது பிரச்சினைகள் அல்ல!

எண்ணற்றத் தனித்தனியான குடும்பங்களுக்கு தலைபோல் விளங்குவதே ராச்சியம் என்பது, அந்தக் குடுமபத்-