பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

37

தலைவர்கள் சமுதாய உரிமைகளின் பிரதிநிதிகளாகவே அரசாங்கத்தின் முன்பு தோன்றுவார்கள் என்றார்.

கன்பூசியஸ், அரசர்களையும், சிற்றரசர்களையும் ஆதரிப்பதால், அவரை முடியாட்சியின் முதுகெலும்பு என்று தவறுதலாகச் சிலர் எண்ணுகிறார்கள். அதுவன்று அவரது சிந்தனையின் முடிவு. அவர் அரசர்களின் ஆட்சிக்கு, ஆளும் சக்திக்கு மதிப்பளிக்கிறாரே தவிர, அரசர்களை அவர் மதிப்பது இல்லை! மதித்திருந்தால் அவர் ஊர் ஊராக அலையும் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அது போலவே வேறு சிலர் கன்பூசியசை பழமைவாதிகள் என்றும் கூறுகிறார்கள். அதுவும் உண்மையும் அன்று! மக்களின் முன்னேற்றம். நாகரீகத்தின் சரியான வழியில செல்வதையே அவர் விரும்புகிறார்!

அந்த நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும், அதற்கோர் எடுத்துக்காட்டாக செயலாற்றிக் காட்டவும், நல்லதொரு ஆட்சியாளனும், அந்நாட்டுச் சட்டங்களை நிலை நிறுத்திட அதிகாரிகளும் தேவை என்கிறாரே தவிர முடியாட்சியை ஆதரிப்பது அல்ல அவரது நோக்கம்.

ஆட்சி புரிவோர் கேடர்களாக இருந்தால், பொது மக்களை வீணான தொல்லைகட்குள் ஆழ்த்திவிடுவார்கள் அதனால், ஆட்சியாளர்களைப் பயிற்றுவிக்கவும், ஆலோசனை கூறவும் பெருங்கவனம் செலுத்த வேண்டும். அதற்காக, அரசாங்கத்தையே ஒரு கல்விக் கோட்டமாக மாற்றி அமைக்கவும் கன்பூசியஸ் தயாரானார்.

அதனால் கன்பூசியஸ் மாபெரும் லட்சிய சோதனை செய்ய ஆரம்பித்தார். சமுதாய முன்னேற்றம் பெற அரசியல் துறையையே அவர் முக்கியமாகவும், முதல் படியாகவும் சிந்தித்துச் செயல்பட்டார். என்றாலும்,