பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43


அதனால்தான் ஞானி கன்பூசியஸ், பழைய திருமறைகளையும், ஆதாரங்களையும் பதிப்பிக்கும் திருப்பணியில் இறக்கினார். அவற்றிலிருந்து அவர் தேர்ந்தெடுத்தக் கொள்கைகள் பழங்காலத்து என்ற காரணத்தால், அதற்குத் தனிப்பெருமையும், சக்தியும் ஏற்பட்டிருந்தன.

அந்த நூல்களைக் கன்பூசியஸ் பொது மக்களின் ஆய்விற்கும் கவனப் பார்வைக்கும் கொண்டு வந்தார். இந்த சிறந்த தொண்டை சீனர்களின் தேசிய பொது வாழ்விற்கு நடைமுறை விதிகளாக்கினார்.

கன்பூசியசுக்கு ஒருவன் தண்டனை பெறுவதில் நம்பிக்கை இல்லை. நல்ல பண்புக்கு அவன் வழி நடத்துவது ஒன்றுதான் உண்மையாக அறிவு என்பது அவரது கருத்தாகும்.

மனிதன் இயற்கையிலேயே நல்லவன்; அதனால் அவனைத் தண்டனையோடு நெருங்குவது அறிவில்லாத செயல். அது மட்டுமல்ல தண்டனை தருவதால் மக்கள் வளர மாட்டார்கள். அவர்கள் வளமாக வாழ வேண்டுமானால், சட்டங்கள்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

சில நன்மைகளையும், தீமைகனையும் பகுத்துணர்வதற்குச் சட்டங்களின் பயிற்சியையும், உதவியையும் அளிக்க வேண்டும்.

தண்டனைகள் மூலமாகவோ, பலாத்காரத்தின் மூலமாகவோ, சிலவற்றை மனிதர்கள் செய்யும்படி வைக்க முடியும். ஆனாலும், இவை கல்வியின் பயன்பாட்டிற்கு கூடாதது-புத்துணர்வாகாது.

சட்ட திட்டங்கள், தண்டனைகள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்திட அல்லது திருத்திட முயன்றால், மக்கள்