பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55

தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும், இன்றும் அவர் சீனநாட்டு மக்களது நெஞ்சங்களிலே பக்தியுலாவாகப் பவனி வருகிறார் என்பவற்றுக்கு அடையாளமாக இன்றும் எண்ணற்ற திருக்கோயில்கள் கன்பூசியஸ் மகான் பெயரால் இருக்கின்றன.

இவ்வளவுக்கும் அவர், மதத்தைப் பற்றியும், மதத்தின் தலைவனான கடவுளைப் பற்றியும் மக்களுக்குப் போதித்தவர் அல்லர்; தனி மதம் எதையும் நிறுவியவரும் அல்லர்! மனிதன் என்பவன் பிறப்பதற்கு முன்பு எங்கிருந்து வந்தான், இறந்த பிறகு எங்கே போகிறது அவன் ஆவி என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து அவுற்கு மோட்சமா-நரகமா? என்ற கற்பனைகளை எழுப்பி மக்களைப் பயமுறுத்தியவரும் அல்லர். பலவீனப் படுத்தியவரும் அல்லர்; என்றாலும், அவருக்கு சீனா நாட்டிலே திருக்கோயில்கள் இன்றும் உள்ளன!

அந்த மகானுடைய மாணவன் ஒருவன் அவரிடம் மரணத்தைப் பற்றிய விவரம் கேட்டபோது; "வாழ்க்கையைப் பற்றியே ஒன்றும் அறியாத உனக்கு மரணத்தைக் பற்றி நீ என்ன தெரிந்து கொள்ள முடியும்? என்று அவனை திருப்பி விடை மூலம் வினா கேட்ட விந்தைமிகு ஞானி கன்பூசியஸ்.

இந்த பேரறிஞனை, சீன மக்கள் மகான்களில் மகான், ஞானக் களஞ்சியத்தின் வைரமணி என்றெல்லாம் இன்றும் பயபக்தியுடன் அவரைப் புகழ்ந்தாலும், அந்த ஞானிகளின் தலைவனான கன்பூசியஸ், மக்களை வியப்பில் ஆழ்த்தும் எந்த அற்புதங்களையும் உலகுக்கு செய்து காட்டியதால் புகழ் பெற்றவர் அல்லர்! அதனால், ஒரு கூட்டத்தையும் தன்பின்னால் சேர்த்துக் கொண்டு இயங்கியவரல்லர் !

அற்புதங்கள் ஆற்றல் காட்டும் வீரதீரச் செயல்கள், மாபெரும் கிளர்ச்சிகள், மகா ஞானிகள் பற்றியன எல்லாம்