பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கன்பூசியஸின்

அந்தக் கலைக்கழகத்தை அவர் துவக்கும்போது கூறுகையில்: ஒரு விஷயத்தின் ஒரு மூலையை நான் கற்பித்தால், மற்ற மூன்று மூலைகளையும் தாமாகவே புரிந்து கொள்ளாத மாணவர்களுக்கு நான் தொடர்ந்து கல்வி கற்பிக்க மாட்டேன். இடம் தரமாட்டேன் என்று கறாராகவே கல்வி மீது அக்கறை காட்டிப் போதித்தார்.

தனது தாயார் இதற்கிடையில் இறந்தபோது, அவர் தாயாருக்காகத் துக்கம் காத்த தனது இரண்டரை ஆண்டு காலத்தில், அறம், இசை அரசியல், தத்துவம் முதலிய வகைகளை எல்லாம் ஆராய்ந்து பண்பட்டார்! அப்போதும், அவரிடம் பலர் நாடிவந்து தமது ஐயங்களைக்கேட்டும் புரிந்து கொண்டார்கள்.

இருபத்தேழாம் வயதில் கன்பூசியஸ், தனது நாட்டின் பழமையான நீதிகளை ஆராய்ந்தார்! அதுதான் அப்போதைய ஞானமாக இருந்ததால், அக்கால ஞானியான வேஓ-ட்ஸே என்பவரை அவரே சென்று நேரிடையாகப் பார்த்து, தங்களது தத்துவங்களின் ஆய்வுகள், முரண்பாடுகள் வேறுபாடுகள் ஆகியன அனைத்தையும் அவர்கள் மனம் திறந்து வாதம் செய்தார்கள். அதனால், இருவருக்குமே ஏதாவது பயனுண்டா என்றால்-ஒன்றுமில்லை.

ஆனால், கன்பூசியஸ், லேஒ-ட்ஸே என்ற அந்தத் தத்துவ ஞானியிடம் விடைபெற்றுப் புறப்பட்டபோது, அந்த அந்த தத்துவ ஞானி கன்பூசியசிடம் என்ன கூறி வழியனுப்பி வைத்தார் தெரியுமா? இதோ அது:

"பெரும் பணக்காரர்களும், பிரபல ஊர் முக்கியஸ்தர்களும் கூடிச் சந்தித்து உரையாடி விடைபெற்றுப் போகும் நேரத்தில் விலை உயர்ந்தப் பரிசுகளை ஒருவருத்து ஒருவர் வழங்கிக் கொள்வது வழக்கம்.

நற்குணமிக்க நல்லவர்கள் கூடிப் பிரியும்போது, அறிவு பூர்வமான ஞானம் செறிந்த நல்ல வாக்குகளையே பரிசுகளாக ஒருவருக்கு ஒருவர் வழங்குவதும் உண்டு.