பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61


நல்ல மனிதனாக நாட்டவரால் எண்ணப்படும் நான், ஒரு சீமான் அல்லன் செல்வமுடையவனும் அல்லன் நாம் இருவரும் கூடிப் பிரியும் இந்த வேளையில் சில வார்த்தைகளைத்தான் என்னால் உமக்குக் கூற முடியும்.

எதையும் கருத்துடன் கூர்ந்து நோக்குபவர்களுக்கும், திறமையுடையவர்களுக்கும், அறிவு நயம் உடையவர்களுக்கும், மரணம் வெகு அருகாமையில் உள்ளதுவாம். ஏனென்றால், இவர்கள் பிற மனிதர்களின் குற்றங்குறைகளைப் பிறரிடம் அடிக்கடி எடுத்துச் கூறியவாறு இருப்பர்.

எதையும் கற்றுத் தெளிந்த வித்தகர்கள் மக்களிடம் பார்க்கக் கூடிய குற்றம் குறைகளை எடுத்து விவரிப்பதால் இவர்கள் உயிரும் எந்த நேரமும் ஆபத்தினால் சூழப்பட்டு பிரிந்து விடும். அதனால், நீயும் உம்மை மன்னரவையின் அமைச்சராக எண்ணிக் கொள்ளக் கூடாது" என்று கன்பூசியசிடம் கூறினார்.

கி மு. 522-ம் ஆண்டின் போது, கல்வியிலே கன்பூசியஸ் கடலாகக் காட்சி தருகிறார்; பல்கலை வித்தகராகவும் விளங்குகிறார் என்ற கல்விப் புகழ் அவரது ஊர் எல்லைகள் கடந்தும் அவருக்குப் பரவ ஆரம்பித்தது. அதனால், மாணவர்கள் எங்கிருத்தும் திரண்டு வந்து அவரின் மாணவர்கள் ஆனார்கள்.

517-ஆம் ஆண்டில் அதாவது, கன்பூசியசுக்கு 83வது வயதான போது, அவரது சொந்த ஊரில் சேவல் சண்டை வழக்கம் போல நடந்தது. இந்த சண்டையால் ஊரெங்கும் கலவரமும், பூசலும், கோஷ்டி மோதல்களும் நடந்தன.

அதன் விளைவாக கன்பூசியசின் 'லூ' அரசைச் சேர்ந்த 'செள' சீமானுக்கும், "சி"நாட்டின் 'பிங்' சீமானுக்கும் மனக்கசப்பு உருவாகி அது போராட்டமாக மாறியது. இந்தப் போரில், நகரத்து 'சௌ' சீமான் தோல்வி