பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

கின்றாளே என்று கண்டு, கன்பூசியஸ் தனது மாணவன் ஒருவனை அவனிடம் அனுப்பி விசாரிக்கச் சொன்னார்.

அந்த மாணவனிடம் அழுது கொண்டே அந்தப் பெண் கூறும்போது, என்னுடைய தந்தை புலியினால் கொல்லப்பட்டார்; அதே புலி என் கணவனையும் சாகடித்தது; அதே மரணம் எனது மகனுக்கும் இப்போது ஏற்பட்டு விட்டதே' என்று மீண்டும் புலம்பிக்கொண்டே இருந்தாள்.

உடனே அந்தச் சீடன் அந்த பெண்ணின் அழுகையை நிறுத்தி, 'இந்தக் கொடுமைகளுக்குப் பிறகும் கூட நீ எப்படி உயிருடன் வாழ்கிறாய்?' என்று அந்த மாணவன் புலம்பியதைக் கேட்டதற்கு, அதற்கவள், 'நான் வாழும் அரசு கொடுமையானது அல்ல' என்றாளாம்.

இந்த விவரத்தை மாணவன் கன்பூசியசிடம் கூறியதும், அதற்கு அவர், கொடுமை நிறைந்த அரசானது கொடும் புவியைவிடப் பயங்கரமானது, என்று குறிப்பிட்டு மேலால் நடந்தபடியே சென்றார்.

'லு' அரசின் 'டிங்' சீமான் ஆட்சியில், தனது ஐம்பதாவது வயதில், குங்ஷான் புன்யூ என்பவர் ஹூவான் சீமானை எதிர்த்துப், 'பீ' பட்டினத்தில் ஒரு கலகத்தை ஆரம்பித்தார்.

அதைக் கன்ட ஹுவான் சீமான், தனக்கு யோசனை கூறவருமாறு கன்பூசியசை அழைத்தான். புறப்பட்ட அவர் தனது மாணவர் ஒருவர் ஏதோ கூறியதைக் கேட்டு பயணத்தை நிறுத்திவிட்டார்.

அதற்குப் பிறகு, கன்பூசியஸ் 'ட்சி' அரசுக்குச் சென்று சேவை ஆற்றிய போது, அந்த சீமான் கன்பூசியசின் தொண்டுக்கு ஏற்ற உபகாரச் சம்பளம் கொடுத்தான். அதை அவர் பெறவில்லை.

'ஒருவன் திறமையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனிடம் இருப்பதால், யாருக்கும்-எந்தவித