பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கன்பூசியஸின்

மான பயனும் ஏற்படாது" என்றுணர்ந்த அவர், அந்த இடத்தை விட்டுத் தனது மாணவர்களுடன் உடனடியாகப் புறப்பட்டார்.

இதுபோன்ற அறிவுரைகளை சமயம் நேரும் போதெல்லாம் கன்பூசியஸ் அடிக்கடி கூறி மாணவர்களுக்கு விழிப்பணர்வை உருவாக்கி வந்தார். இந்த நேரத்தில், அவரது 51-வது வயதில், அவருக்கு 'கந்டு' நகரின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் பதவியைப் பெற்றார்.

இந்தப் பதவியில், அவரது திறமையை நன்கு வெளிப்படுத்த இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது. கன்பூசியஸ் திறமையான, பணியால் நாளுக்கு நாள் பயனும், பலனும் கிடைத்து வந்தது.

அதற்குப் பிறகு அவர், பொது நிறுவனங்களின் கண்காணிப்பாளருக்கு உதவியாளரானார். பிறகு, காவல்துறை அமைச்சரானார். எந்தப் பணியை அவர் ஏற்றாலும் அந்தப் பணியிலே ஒரு வியப்பை உருவாக்கினார் நாட்டிற்குள் அமைதியை உருவாக்கினார்.

அமைதியின்மையை விளைவிப்பவர்களுக்குத் தக்க தண்டனைகளைக் கடுமையாக வழங்கினார். நீதித்துறைப் பணிகளிலும் தனது கடுமையைக் காட்டினார். குறிப்பாகக் கூறுவதானால், கன்பூசியஸ் காவல் துறையிலும், நீதித் துறையிலும் பணியாற்றியக் காலத்தில் திருடர்களோ, அல்லது அவர்களது பயமோ நாட்டில் ஏற்பட்டதில்லை.

'டிங்' சீமானின் ஆட்சியின் பதினான்காவது ஆண்டில், கி.மு.495-ம் ஆண்டின் போது கன்பூசியசுக்கு வயது அறுபது. நீதித்துறையில் அவர் ஒரு முக்கிய மந்தரியாகப் பதவியேற்றார். அதனால், மகிழ்ச்சி அடைந்த கன்பூசியசிடம் ஒரு மாணவர் கேள்வி ஒன்று கேட்டபோது:

'குருவே! நேர்மையான மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் போக்கில் வரும் இன்ப துன்பத்தை சமாதான மன நிறைவுடன் தானே வரவேற்க வேண்டும் என்றார்.