பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கன்பூசியஸின்

என்று அவரைத் தவறாக ஆள் மாறாட்டம் செய்து கொண்ட மலைப்பகுதி மக்கள், கன்பூசியசைப் பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். ஐந்து நாட்கள் கழித்தபின், அவர் ஒரு நாடோடி ஞானி என்று தெரிந்த பின்பு அவர்கள் அவரை விடுதலை செய்தார்கள்,

விடுதலையான கன்பூசியஸ் 'பூ' என்ற அரசுக்குச் சென்று சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் 'வெய்' என்ற நாட்டிற்கே வந்த தங்கியிருந்தார்; ஒரு நாள் 'வெய்' சீமான் தனது அரசியுடன் பல்லக்கில் பவனி வந்து கொன்டிருந்தார்.

அந்நகரத்து மக்கள் பெருந்திரளாக ராணியின் கவர்ச்சியை அழகை, பகட்டான பல்லக்குப் பவனியை பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு மாணவன் குருவைப் கார்த்துக் கேட்டக் கேள்விக்கு அவர் பதில் கூறியபோது; "மக்கள் எழிலரசிகளின் அழகு முகப் பொலிவைக் கண்டு அகமகிழ்ச்சிக் கொள்வதுபோல, எல்லாம் கற்றுத் தெளிந்த ஞானியின் முகத்தைக் கண்டு கவர்ச்சி அடைய மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

பிறகு, 'ட்சாங்' அரசில் இவர் ஒரு மரத்தடியில் தங்கி தமது மாணவர்களுக்கு அறிவு போதனை செய்தார். அதை அறிந்த அந்த நாட்டின் தளபதி ஒருவன் மரத்தடிகளை எல்லாம் வெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான், வெட்டிய மரம் தனது தலைமேலே விழுவதற்குள் கன்பூசியஸ் தப்பித்துக் கிளம்பி விட்டார்.

தப்பித்துவிட்ட கன்பூசியஸ் தனது மாணவர்களிடம் பேசும்போது, 'நான் மேலுலகம் பணித்ததைச் செய்து வருபவன் இந்த அற்ப சேனைத் தலைவனால் எனது லட்சியப் பணியைத் தடுத்துவிட முடியாது" என்று கூறி விட்டுத்தம் மாணவர்களுடன் செங் என்ற அரசுக்கும் புறப்பட்டுவிட்டார்.