பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

96


'செங்' அரசுக்குச் சென்றபோது, தனது மாணவர்களை விட்டுப் பிரிந்து அவர் மட்டும் தனியாக அந்த அரச கோட்டை வாயிலிலே சென்று நின்றார். அதைப்பார்த்த காவலன் உடனே 'ட்சேமுல்' என்பவரிடம் ஓடி 'நம் நகர்க் கோட்டை வாசலில் கம்பீரமானத் தோற்றத்துடன் சிலைபோல் ஒருவர் திக்கின்றி சுற்றியலையும் நாயைப்போல நிற்கின்றார் என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கன்பூசியஸ் ஆமாம் எனது தோற்றத்தைப் பற்றிக் கூறியவை முக்கியமல்ல! திக்கில்லாமல் சுற்றியலையும் நாய்க்கு என்னை ஒப்பிட்டது மிகப் பொருத்தமானானதே என்றார்.

அந்த இடத்தை விட்டு அகன்ற அவர், 'யென்’ அரசிற்குச் சென்று மூன்றாண்டுகள் தங்கினார். பிறகு 'பூ' அரசைக் கடந்து மீண்டும் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்களில் சிலர் அவரை வழிமறித்துக் கொண்டார்கள். அவர்களை எல்லாம் அவரது மாணவர்கள் அப்புறப்படுத்தினார்கள். வழிமறித்த மக்கள் கன்பூசியசைப் பார்த்து, 'வெய்' அரசுக்குச் செல்வதில்லை என்று வக்குறுதி கொடுக்குமாறு கேட்டார்கள்; சரி, என்று ஒப்புக்கொண்ட அவர், மீண்டும் அந்த அரசுக்கே தான் கொடுத்த வாக்குறுதியை மீறிச்சென்றார்.

கொடுத்த வாக்குறுதியை நீங்களே இப்படி மீறலாமா? என்று அவரை மாணவர்கள் கேட்டபோது, "கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட வாக்குறுதியைக் கைதவற விடுவதில் அதர்மம் ஒன்றுமில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கடவுளின் காதுகளுக்குப் போய் சேர்வதில்லை"

அப்போது, 'பிஷ்ச்' என்பவன் 'கல்மெங்' பட்டினத்தின் நீதிபதியாக இருந்தார். தனது நகரை விரோதிகள்