பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கன்பூசியஸின்

தாக்குவதைத் தடுக்க, அதற்குரிய யோசனைகளைக் கேட்பதற்காகக் கன்பூசியசைத் தன் நகருக்கு வருமாறு கேட்டுக் கொண்டான்.

அந்த நேரத்தில் 'ட்பூலூவி' என்ற அவரது மாணவன், 'ஆசானே, நெறி தவறிய வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு நீங்கள் உதவி புரிவதா?’ என்றான். அதற்கு அவர், 'உண்மையாக, கடினமான பொருளானது அரைக்கப்படுவதற்கு அஞ்சுவதில்லை. நல்ல தூய்மையான வெண்ணிறம் உள்ள பொருளானது வெளிப்புறக் கலவைகளால் தன் வெண்மை நிறத்தை இழக்காது. நான் எத்தனை நாட்களுக்குப் புடலங்காயைப் போல துவண்டுத் தொங்கிக் கொண்டிருப்பேன்?' என்றார்.

ஹுவான் சீ என்ற சீமான் தனது மரணப்படுக்கையில் இருக்கும்போது, ஒரு காலத்தில் 'லூ' அரசு சீரும் சிறப்புமாக இருந்தது. தான் ஒரு சமயம் கன்பூசியஸ் மனதைப் புண்படுத்திவிட்டேன். அதனால் அந்த நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டது. என்று கூறிய அந்த சீமான், தனது அருகே இருந்த 'காங்சீ' சீமானை நோக்கி, நான் இறந்த பிறகு நீ தலைமை அமைச்சன் ஆவாய்; அப்போது ஞானி கன்பூசியசை இந்த நாட்டின் உயர்ந்த நிர்வாகத்தில் அமர்த்து என்று உருக்கமாகக் கூறினார்.

அதுபோலவே கன்பூசியசை சம்பந்தப்பட்ட சீமான் பதவியில் அமர்த்தியபோது, அவனது சகோதரன் ஒருவன் இடைமறித்து, கன்பூசியசை உயர்பதவியில் உட்கார வைக்காமல்! அவருக்குப் பதிலாக அவரது மாணவனான ஜான் ச்யூவை அரசியலுக்கு அழைக்கச் சென்றபோது ஒரு மாணவன் ஜான் ச்யூவை பார்த்து "உண்மையான அதிகாரத்தை உன்னிடம் வழங்கிட 'லூ’ அழைக்கிறது" என்றான்.

மற்றொரு சீடன் ஜான் ச்யூவைப் நோக்கி, 'நீ பதவியில் அமர்ந்ததும் நமது குரு கன்பூசியஸை உன்னிடம் அழைத்