பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

75

ஆட்சிமுறையை நெறிபடுத்தலாமா என்று கூட நினைத்தான்.

'வெய் அரசில் உங்களுக்கு முக்கிய பதவி தந்தால் முதலில் என்ன செய்வீர்கள்?’ என்று மாணவன் ஒருவன் கன்பூசியசைக் கேட்ட் போது, "முதலில் அரசின் நிர்வாகத்திலே பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகளை எல்லாம் திருத்தி அமைப்பேன். அவற்றை எந்த பொருளில் எப்போதெல்லாம் உபயோகிக்க வேண்டும் என்ற ஒழுங்கை நிலைநிறுத்துவேன்" என்றார்.

உடனே அந்த மாணவன், எதற்காக அதை முதல் காரியமாகச் செய்ய வேண்டும்? என்று அக்கறை ததும்பக் கேட்டான். அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை இன்றைய ஒவ்வோர் அரசும் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.

ஓர் அரசின் நிர்வாகத்தில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ஒருவர் தனது கருத்தைப் பேசும்போது சரியான வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முடியவில்லை.

ஓர் அதிகாரி தனது ஆணைகளைப் பிறப்பிக்கும்போது அதற்குரிய சரியான மொழிச் சொற்களால் குறிப்பிட முடியவில்லை. அந்த மாதிரியான ஒரு நிலை உருவாகும் போது, அந்த அதிகாரி விரும்பும் அளவுக்கு அந்த ஆணை பயன்தராமல் போய்விடுகின்றது.

இதுபோலவே, தொழுகை முறையிலும், சமூக உறவு முறைகளிலும் சரியான பதங்களைப் பயன்படுத்தத் தவறும் போது, அந்தத் துறைகளில் பலவிதமான பொருட்பேதங்களும் விளைகின்றன.

நாட்டின் நீதி நிர்வாகங்களிலும், பொருட் பேதங்களும், அனர்த்தங்களும், தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலைகள் ஓர் ஆட்சியில் ஏற்படு-