பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

77

தமது மாணவர்களைத் துணையாக வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தார்! அவற்றைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும் இருந்தார்!

கி.மு. 722-ம் ஆண்டு முதல் கி.மு. 461-ம் ஆண்டு வரை நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்று திரட்டினார்; வரலாற்று வடிவமாக்கினார்; அவற்றை நூல் வடிவத்தில் வெளியிட்டார்.

கன்பூசியஸ், நியாயமும் நேர்மையும் இல்லாத கருத்துக்கள், ஆணவமும் அகந்தையும் உடைய குணங்கள், குறுகிய மனப்பான்மையால் விளைந்த சம்பவங்கள், தற்புகழ்ச்சியால் மனிதநேயத்தை மாசுபடுத்திய தன்மைகள் ஆகிய நான்கு வகை பொருந்திய கருத்துக்களை எல்லாம் குப்பையென ஒதுக்கிவிட்டார். அவர் வெளியிட்ட நூலில் மேற்கண்டவைகள் எதையும் பார்க்க முடியாது.

ஆனால், மனித சமுதாயத்திற்குத் தேவையான மூன்று குணங்களுக்குரிய செய்ல்கட்கு மரியாதையும் மதிப்பும் தந்தார். அவை; தொழுகைக்கு மூன் குளிக்கும் முறை, போர், நோய் போன்றவைகளாகும்.

கன்பூசியஸ் மன வேதனைப்பட்டு வருந்திய சம்பவங்கள்:

◯ விதி, இலாபம், சுவர்க்கத்தின் ஆணை இவற்றை பற்றி அபூர்வமாகவே பேசியவர் கன்பூசியஸ்.

◯ ஒரு மனிதன் தனது மனதைப் பண்படுத்தாமல் இருப்பது.

◯ சரியான முறையில் கல்வி பயின்றும், சகல விஷயங்களைப் பற்றியும் கற்றுத் தெளியாமல் இருப்பது:

◯ நேர்மையான பாதை என்று தெரிந்தும், அதைப் பின்பற்றாமல் இருப்பது;

◯ தன்னுடைய தவறுகளை உணர்ந்தும் அவற்றை விலக்காமல் இருப்பது;

இவை, கன்பூசியஸ் என்ற ஞானியை வருத்தபட வைத்த சம்பவங்கள்: