பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79

முடிவின் அறிகுறியே இது என்று நம்பினார்! அப்போது இந்த உலகில் என்னைச் சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று கூறி ஆற்றமுடியாத சோக வெள்ளத்திலே மிதந்து போனார்!

◯ தனது கடைசி காலத்தில் 'வசந்தமும்-பின் பனியும்' என்ற நூலை எழுதினார்! இந்த நூலிலேதான் கி.மு. 727-ம் ஆண்டில் ஆட்சி செய்த 'யின்’ சீமானின் காலம் கி.மு. 48-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த 'யெய்' சீமானின் ஆட்சிக்காலம் வரையுள்ள பன்னிரண்டு சீமான்களின் ஆட்சிக்காலம் வரை வரலாற்றுச் சம்பவங்களையும், அவர்கள் செய்த அக்கிரமச் செயல்களையும்-நன்றாக, தெளிவாக விளக்கி, அந்த மனிதத் தன்மையற்றச் செயல்களைக் கண்டித்து அத்துடன் இவர் எழுதியுள்ள கண்டனங்களையும் ஒன்று சேர்த்து நூலாக வெளியிட்டார்.

◯ கன்பூசியஸ் இவ்வாறு அந்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஏன் எழுதினார்? வருங்காலத்தில் ஆட்சிப்பொறுப்பு வகிப்பவர்கள் இத்தகைய ஒரு வரலற்று அவமானங்களை நடத்தக்கூடாது என்பதற்காகத்தான் அந்த நூலை அவ்வாறு எழுதி வெளியிட்டார்.

கன்பூசியஸ் என்ற ஞான வேளான் விவசாயத்திலே வளர்ந்து அறுவடைப் பயிர்களுல் ஒருவரான 'ட்சூலு' கி.மு. 480 ஆம் ஆண்டு மறைந்து விட்டான்! இந்த நேரத்தில் வேளாண் பெருமகனான கன்பூசியஸ் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

பழுத்துப் பழமான கன்பூசியஸ் பெருமானைப் பார்ப்பதற்க அவரது அறிவு வளர்ப்புச் செல்வன் 'ட்சேகுங்', தனது பேராசானைக் காண ஓடோடி வந்தான்!

வயோதிகத்திலும் ஒரு சிறு கோபம் வந்த அந்தப்பேரறிவாளன் இவ்வளவு காலம் கடந்து என்னைப் பார்க்க இப்போது ஏன் வந்தாய்? என்று கேட்டுவிட்டு,

"மாபெரும் மலையும் தானே
பொடியாகி மறைந்து போகும்! உறுதியான தூண்களும் ஒருநாள்
உடைந்து ஒழிந்து போகும். செடிபோன்ற் இந்த ஞானி
வாடி மறையலானேன்"

என்று துன்பமும் துயரமும், சோகமும் சோர்வுமான தளர்ந்த குரலில் ஞானி கன்பூசியஸ் தத்தித் தத்திப் பாடிக் காற்றோடு காற்றாகிக் காலமானார்!