பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

மட்டுமல்ல அவர் தொழில்; இயற்றிய பாடல்களை உளம் உருகப் பாடிக்காட்டி மக்களை, மாணவர்களைப் பரவசப்படுத்தி மகிழ்வூட்டிய ஓர் இசைப்பாடகர்; ஒரு சங்கீத விற்பன்னர். நமது நாட்டுச் சங்க காலப் பாணர்களைப் போல!

கன்பூசியஸ் என்ற பேரறிவாளன் ஓர் அரசியல் வாதி! அமைச்சராக அரும்பணி ஆற்றியவர்-சேக்கிழார் பெருமானைப் போல நாட்டின் காவலராக வாழ்ந்தவர்! அவருடைய அரிய ஆட்சிப்புலமையை ஏற்றுக் கொள்ளும் அரசியல் அறிஞர்கள் அப்போது இல்லாததால், சீன ஆட்சிகள் ஒரே குழப்பக் குட்டைகளாகக் காட்சித்தந்தன!

கன்பூசியஸ் அந்தந்த நேரத்தில் எந்த காரியத்தையும் அலட்சியம் செய்யாமல்; "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதாக மதித்துப் பணியாற்றிய ஒரு காரியவாதி! ஒரு சமயம் ஆடுமாடுகளைக் கூட மேய்த்துக் கூலி பெற்றார்! மறுமுறையோர் நேரத்தில் கால்நடைக் கண்காணிப்புக் கணக்கராகவும் காரியமாற்றினார்! அதே மனிதரிதான், அமைச்சனாகவும், ஞானாசிரியனாகவும், மாணவப் போதகராகவும் அலுவலாற்றினார். எதைச் செய்யத் துணிந்தாலும் காரியவாதியாகவே செயல் புரித்தார்!

தத்துவ ஞானம் கற்றுத் தரித்திரராக ஊர் சுற்றிச் சுற்றி வறுமையோடும் போராடிடும் நாடோடியாகவும் திரிந்தவர் கன்பூசியஸ்!

மேற்கண்ட அத்தனைச் சிறப்புகளும், மேன்மைகளும் ஒன்றாக இணைந்த ஒரு மனித உருவமாக, ஞான ஆத்மாவாக, புதிய எண்ணங்கள் என்ற பூக்கள் மலரும் செடி கொடிகளாக, புதிய லட்சியக் கனிகள் பழுக்கும் முக்கனி மரங்களாக மக்கள் இடையே நடமாடிய ஒர் அற்புத ஞானாவதாரமாக, வானகம் தந்த இயற்கைக் கொடையாக நடமாடியவர் கன்பூசியஸ் என்றால் மிகையாகா!