பக்கம்:கபாடபுரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117


அவிநயனாரே?" என்று அவிநயனாரை மடக்கினார். இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் பெரியபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அவிநயனார். பெரியவர்களும் மூத்தவர்களும் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் பேச்சில் இடையே தான் குறுக்கிடுவது கூடாது என்று கருதியது போல் அடக்கமாகவும் விநயமாகவும் ஒதுங்கி நின்றான் சாரகுமாரன்.

"பழந்தீவுகளுக்குப் பயணம் செல்லுமுன் இளையபாண்டியனை அரச கம்பீர மரியாதைகளுடன் இந்தக் கபாடபுரத்தின் பிரதான வீதிகளில் நகருலா வரச்செய்யவேண்டு மென்பது என் ஆசை. வசந்தகாலத்தின் செழிப்பான மலரைப்போல் இளமை அரும்பி நிற்கும் நம் சாரகுமாரனைக் கோ நகரில் யாவரும் காண ஆவலாயிருப்பார்கள் அல்லவா?" என்று ஒரு விநோதமான ஆசையை வெளியிட்டார் சிகண்டியார், ஆனால் என்ன காரணத்தாலோ, அப்படிச் செய்யமுடியாது செய்யவும் கூடாது' என்று பெரிய பாண்டியர் அதை உடனே மறுத்துவிட்டார்.

"நகரனிமங்கல நாளன்றுத்ான் எங்களோடு இவனும் தேருலா வந்திருந்தானே? இப்போது மறுபடியும் தனியாக இன்னொரு நகருலாவுக்கு அவசியமென்ன?"

"அது பொதுவாக நிகழ்ந்த தேருலா மூவாயிரம் முத்துத்தேர்கள் தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்டன. அதில் ஏதோ ஒரு தேரில் இளையபாண்டியனும் வந்தான். நீண்ட நாள் குருகுலவாசத்துக்குப் பின் சாரகுமாரன் கோ நகரத்துக்கு வந்திருப்பதால் அவன் மட்டுமே சிறப்பாகவும், தனியாகவும் ஒரு தேருலா வருதல் வேண்டும்..."

"இவ் வேளையில் அப்படிச் செய்வது நல்லதில்லை. இவன் பழந்தீவுகளைச் சுற்றிப்பார்க்கப் புறப்படுகிறான் என்ற செய்தியைப் புறத்தார்க்கு அதிகம் தெரியக் கூடாதென்று கருதுகிறேன் நான். தேருலா நிகழச் செய்வது இந்தப் பயணத்தை ஊரறிய முரசறைவது போலாகும். பல்வேறு தீவுகளின் ஒற்றர்களும் நிரம்பியுள்ள நம் கோ நகரத்தில் இப்போதுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/119&oldid=490045" இலிருந்து மீள்விக்கப்பட்டது