பக்கம்:கபாடபுரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கபாடபுரம்


மென்று தோன்றியது. ஏதோ வேட்டையாடுகிறவர்கள் தங்களுடைய ஆற்றலைவிட எளிய விலங்குகளுக்கு விரித்த வலையில் அவை தவறாமல் விழுந்து சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஓடி வருவதுபோல் இருந்தது அவர்கள் வரவு. எளிய விலங்குகளை வலிய விலங்குகள் இரைகண்டு மகிழ்ந்து தாவிப் பாய்ந்து வருவதுபோல் ஒர் வெறியை இவர்களுடைய பாய்தலில் அவர்கள் கண்டார்கள்.

இளையபாண்டியன் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு புதரிலிருந்து எழுந்து நின்றதோடு தன்னைப் பின்தொடர்ந்து உடன் நிற்குமாறு முடிநாகனுக்கும் குறிப்பினால் உணர்த்தினான். கபால மலைகளோடும் புலிப்பற்கள் போன்ற கோரப் பற்களைத் திறந்த வாயுடனும் அவர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்ட காட்சி மிகவும் குரூரமாக இருந்தது. வலையிலகப்பட்ட மீன்களைப்போல் இளையபாண்டியனும், முடிநாகனும் அந்தப் பைசாசங்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். திரிசூலங்களையும், வேல்களையும், கொலைக்கருவிகளையும் ஓங்கிக்கொண்டு அந்தக் கொடிய கூட்டம் தங்கள்மேல் பாய்ந்தபோது அந்தத் தீவில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தபோது தன் காலில் இடறிய எலும்புக்கூடு நினைவிற்கு வரப்பெற்றவனாக நடுங்கினான் முடிநாகன். இளைய பாண்டியனோ சிறிதும் அஞ்சாதவனாக எதோ ஒரு நம்பிக்கையினால் திடம் கொண்டவனைப்போல் அவர்களிடையே இருந்தான். அவர்கள் இளையபாண்டியனையும், முடிநாகனையும், வேட்டையாடிய விலங்குகளையோ, வலையில் விழுந்துவிட்ட மீன்களையோ இழுத்துச் செல்வதுபோலத் தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றனர்.

சுற்றிலும் கபாலங்கள் அடுக்கிய குருதிநிறப் பாறை ஒன்றில் முரட்டுச் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கொடுந்தீவின் தலைவன். அவனருகிலே நெருங்கி நிற்கவும் முடியாமல் முடைநாற்றமும், மாமிச வாடையும் வீசியது. அவனுடைய கண்கள் நெருப்புக் கோளங்களைப்போல் சிவந்து உருண்டன. மீசையோடு கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/154&oldid=490082" இலிருந்து மீள்விக்கப்பட்டது