பக்கம்:கபாடபுரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கபாடபுரம்


ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச்செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.

இசைக் கலையின்மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக்கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக்கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவித்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கணிகிறது. மனிதன் இன்னொன்றின்மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம்தான் இசையோ என்னவோ?

பழந்தீவுகளில் பயணம்செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் முடிநாகனின் துணையும்கூட இல்லாமல் உலாவச் சென்று வருவதுபோல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.

இருள்பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஒலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும், மனத்திற்குள் ஒடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப்பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தனிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவதுகூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற்போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.

புன்னைமரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/166&oldid=490095" இலிருந்து மீள்விக்கப்பட்டது