பக்கம்:கபாடபுரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கபாடபுரம்


கனிவோ இல்லாததை அவர் முன்பே கூர்ந்து கவனித்து உணர்ந்துவிட்டார். அந்த வேண்டுகோளில் யாருமே விரும்பத் தக்கதல்லாத ஒரு கடுமையான உள்நோக்கம் இருப்பதுபோல் சிகண்டியாசிரியருக்குத் தோன்றியது. அதற்கு இணங்கவும் மனமின்றி அதை மறுக்கவும் இயலாத வாராய்க் குழப்பமானதொரு மனநிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.

கண்ணுக்கினியாளைப் பற்றிப் பெரியபாண்டியரிடம் எதுவும் கூற நேர்ந்தால் அவருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி கூறுமாறு இளைய பாண்டியன் தன்னிடம் வேண்டிக் கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்ந்தார் சிகண்டியாசிரியர். சிறிய காரணத்துக்காகவோ, பெரிய காரணத்துக்காகவோ எதற்குமே அவர் பொய் சொல்லிப் பழகியதில்லை. பொய் சொல்லக் கூடாதென்ற நோன்பை அழித்துக் கொள்ளக் காரணம் சிறிதாயிருந்தால் என்ன? பெரியதாயிருந்தால் என்ன? அது அவரால் முடியவில்லை. பெரிய பாண்டியரைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துப்போக அவர் இணங்கிவிட்டார். அப்படித் தம்மை அங்கு அழைத்துப் போகும் செய்தியை இளையபாண்டியனுக்குத் தெரிவிக்கலாகாது” என்றும் சாமர்த்தியமாகச் சிகண்டியாசிரியரிடம் வாக்கும் வாங்கிக் கொண்டுவிட்டார் பெரியவர். கலை உள்ளத்தின் கணிவையும், மென்மையையும் அரசியல் காரணங்களுக்காக அவற்றை அணுகுகிறவர்களால் புரிந்துகொள்ள முடியாமற் போகிறதே என்று உள்ளுற வருந்துவதைத் தவிரச் சிகண்டியாசிரியரால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை. இளைய பாண்டியன் தன்னைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துச்சென்ற அதே தின்த்தின் மாலைவேளையில் பெரியவரைத் தான் அவளிடம் அழைத்துச் செல்லவேண்டியவராக இருந்தார் சிகண்டியாசிரியர்.

காலையில் இளைய பாண்டியனோடு கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றபோதிருந்த அவ்வளவு உற்சாகம் மாலையில் வெண்தேர்ச்செழியரோடு சென்றபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/174&oldid=490104" இலிருந்து மீள்விக்கப்பட்டது