பக்கம்:கபாடபுரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23


தேர் விரைந்து கொண்டிருந்தது. நிலாவோ உச்சி வானத்தையும் கடந்து விட்டது. சாலையில் இப்போது கூட்டம் குறையலாயிற்று. யாத்திரிகர்கள் அங்கங்கே தங்கி அதிகாலையில் புறப்படலாமென்று ஒடுங்கியிருக்க வேண்டும். ஆயினும் சில சில இடங்களில் கூட்டமாகப் பொருநரும் விறலியரும் மட்டும் இசைப் பாட்டுக்களைப் பாடியபடி சென்று கொன்டிருந்தனர். கபாடபுரத்தின் மாபெரும் கபாடங்கள் நிலா ஒளியில் தெரிகிற எல்லைவரை அவர்களுடைய தேர் ஊரருகில் வந்துவிட்டது.

அந்த வேளையில் அந்த இடத்தில் சாலையை மறைத்தாற் போலப் பத்துப் பன்னிரண்டு பேர்களடங்கிய ஒரு பொருநர் கூட்டம் நின்றிருந்தது. கூட்டத்தில் ஆடவரும் பெண்டிருமாகச் சிலர் கதறியழுததும் கேட்டது. நெஞ்சைத் தொட்டு உருக்கும் அந்த அழுகை இளையபாண்டியன் தேரை நிறுத்திவிட்டுக் கீழிறங்கும்படி செய்தது. பரிகளின் கடிவாளக் கயிற்றை அருகிலிருந்து முடிநாகனிடம் கொடுத்துவிட்டு ஆசிரியரிடம் சொல்வதற்காகத் திரும்பியபோது அவர்கள் தேரிலிருந்தபடியே சிறிது கண்ணயர்ந்திருப்பது போல் தோன்றவே சாரகுமாரன் அவர்களை உரத்த குரலில் கூவியெழுப்பிச் சிரமப்படுத்த விரும்பாமல் தேர்தட்டிலிருந்து கீழிறங்கி அந்தப் பொருநர் கூட்டத்தை நோக்கி விரைந்து நடக்கலானான். ஒருவிதமான ஆவலால் உந்தப்பட்டுக் கடிகயிற்றைச் சட்டத்தில் கட்டிவிட்டு முடிநாகனும் விரைந்து இளையபாண்டியரைப் பின்பற்றி அந்த இடத்திற்குச் சென்றான்.


2. கண்ணுக்கினியாள்

இசைக் கருவிகளின் பல்வேறு வகைகளையும், பல்வேறு வடிவங்களையும் சுமந்து நின்ற பொருநரும், பாணரும், விறலியருமாகக் கூடியிருந்த அந்தக் கூட்டம் தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/25&oldid=489924" இலிருந்து மீள்விக்கப்பட்டது