பக்கம்:கபாடபுரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

35


பார்க்கிற ஞானம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இளமையிலேயே வந்துவிட வேண்டும்."

"வருகிற வழியில் பொருநரும் பாணரும், விறலியரு மாயிருந்த ஒரு பாணர் கூட்டத்தைப் பார்த்தேன் தாத்தா அந்தக் கூட்டத்தில் சிலர் கலங்கி அழுதுகொண்டிருந்தனர். என்னவென்று அருகில் போய்ப் பார்த்தபோது ஒர் இளம் பெண் மயங்கி விழுந்திருந்தாள். அவளுடைய மயக்கத்தை நீக்கி அந்தக் கூட்டத்தினரின் கலக்கத்தைத் தவிர்த்தேன்... அதோடு..."

"அதோடு என்ன?"

இளையபாண்டியன் மேலே சொல்லத் தயங்கினான். முதிய பாண்டியர் அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும், "அதோடு என்னவென்பதைத்தான் சொல்லேன்?" - என்று அழுத்தமாக வினாவினார்.

"ஒன்றுமில்லை! அந்தப் பெண்ணை மட்டும் என்னுடன் தேரில் அழைத்து வந்து நமது நகரெல்லையில் இறக்கி விட்டேன். பாவம் மிகமிகத் தளர்ந்து போயிருந்தாள்..."

"துன்புறுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஆண்கள் பெண்கள் என்று பிரிவோ, பேதமோ இல்லை. ஆனாலும் இளம் பெண்களுக்கு உதவி செய்வதில் கவனமாயிருக்கவேண்டும். உன் உதவி அவர்கள் மனத்தை நெகிழச் செய்யும். முதலில் நன்றி தெரிவிப்பார்கள். அப்புறம் புன்னகை செய்வார்கள். நிறையப் பேசுவார்கள். உன் மனமும் நெகிழும். போகப் போக வேறுவிதமாக ஆனாலும் ஆகிவிடும். இதில் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். எல்லாருக்குமே இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/37&oldid=489936" இலிருந்து மீள்விக்கப்பட்டது