பக்கம்:கபாடபுரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

43


போகிறார்?' என்ற கேள்வி தேர்ப்பாகன் முடிநாகன் முதல் அங்கு கூடியிருந்த பல்லாயிரவர் மனத்திலும் ஒருங்கே ஏற்பட்டது.


4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்

இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று கொண்டது. நூலிழை கோத்தாற்போல் வரிசையாக இடை வெளிவிடாமல் வீதியில் செல்லவேண்டிய தேர் உலாவில் இதனால் இடைவெளி உண்டாகி அணிவகுப்புக் குலைந்தது.

'அத்தனை அவசரம் என்னவாயிருக்கும்?' - என்று எல்லாருடைய கண்களுக்கும் தேரிலிருந்து கீழிறங்கி இளைய பாண்டியர் சென்ற திசையையே நோக்கின. அங்கே அவர்களுக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. தேர் உலாக்கோலத்தில் இளையபாண்டியர் மிக மிகக் கவர்ச்சி நிறைந்து தோன்றினார். சொந்த தேசத்தில் விளைந்த முத்துக்களும், இரத்தினங்களும் பதித்த கிரீடத்தினோடு சுருண்ட கருங்குஞ்சி பிடரியில் கற்றை கற்றையாய் அலையிட ஆண் சிங்கம் போல அவர் நடந்து சென்ற அழகைக் கண்டு மயங்காதவர்களில்லை. அவருடைய அழகிலே பெண்மையின் கனிவு இருந்தது என்றால் நடையிலே ஆண்மையின் கம்பீரம் இருந்தது. பெருமிதமும் இருந்தது. தேரிலிருந்து கீழிறங்கி நடந்துபோய் அவர் செய்த காரியத்தைப் பார்த்தபோது தோற்றத்தில் மயங்கியவர்களே மறுபடியும் அவருடைய தொண்டினால் மயங்கினார்கள்.

கூட்டத்தில் இடியுண்டு நெருக்கப்பட்டதன் காரணமாக இளம் பாண்மகள் ஒருத்தியின் கைகளிலிருந்து இழே நழுவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/45&oldid=489944" இலிருந்து மீள்விக்கப்பட்டது