பக்கம்:கபாடபுரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

71


இருவரும் மறைந்து நின்று அங்கு மேலே நடப்பதைக் கவனித்தனர். வீதியின் முகப்பில் மாபெரும் மேடையிட்டு மிகப் பெரியதாக அந்த முரசத்தைக் கட்டி நிறுத்தியிருந்த அவுனர்கள் அதை எந்த நோக்கத்தோடு அங்கே அமைத்திருக்கிறார்கள் என்ற ரகசியமும் அன்று இளையபாண்டியனுக்கும் முடிநாகனுக்கும் தெரிய நேர்ந்தது. அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றபோதே முரச மேடையின் அருகே நின்ற அவுணர்கள் நிலவொளியில் திடீர் திடீரென்று மாயமாக மறையலாயினர். கூர்ந்து நோக்கியபோது முக்கால் பனை உயரத்திற்கிருந்த அந்த முரசத்தின் கீழ்ப்பாகத்தில் அது பிறருக்குத் தெரியாத வண்ணம் சாதுரியமாக ஒரு சிறு நுழைவாயிலிருப்பதும் தெரிந்தது.


8. கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள்

அவுணர்வீதி முரச மேடையிலிருந்து நுணுக்கமான உள் வழியில் புகுந்து காணவேண்டுமென்று இளைய பாண்டியன் விரும்பியும் முடிநாகன் அப்போது அதற்கு இணங்கவில்லை. 'இளங்கன்று பயமறியாது' - என்பதுபோல் பேசினான் சாரகுமாரன் :

"கொள்ளையிடுவதும் ஊனுண்ணுவதுமாகத்திரிந்த இந்த இராட்சதக் கூட்டத்திற்கு நாகரிக வாழ்வு கொடுத்தாரே பாட்டனார்; அவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா இவர்கள்? இந்தக் கூட்டத்தினரால் எப்படித்தான் இவ்வளவு நன்றி விசுவாசமில்லாமல் வாழ முடிகிறதோ?"

"மனம் பண்படப் பண்படத்தான் நன்றியைப் போன்ற உயர்ந்த குணங்கள் எல்லாம் வருமென்று தங்கள் பாட்டனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/73&oldid=489996" இலிருந்து மீள்விக்கப்பட்டது