பக்கம்:கபாடபுரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கபாடபுரம்


அதில் தங்கள் பாட்டனார் வல்லவராயிருக்கும்போது யார் எது செய்தால்தான் என்ன" என்று திடமாக மறுமொழி கூறினான் முடிநாகன்.

அந்தச் சுரங்க வழியில் வழிபோகும் திக்கையே குறியாக வைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் கீழே பாறை போலிருந்தது. இன்றும் சில இடங்களில் மணற்பாங்காயிருந்தது - மேலும் சில பகுதிகளில் கற்படிகளே செதுக்கப்பட்டிருந்தன. 'வழி எங்கே போய் மேலே ஏறுகிறது? எங்கே போய் முடிகிறது?' என்று தெரிந்துகொள்வதும் அவ்வளவு எளிய காரியமாயில்லை. எப்படியும் பொழுது புலர்வதற்குள் அந்த இருட்குகைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் அவசரமும் அவர்களுக்கு இருந்தன.

அயலவர்களோ, பிறரோ ஒற்றறியும் எண்ணத்துடனோ இரகசியங்களை அறிந்து சென்று வெளிப்படுத்தும் எண்ணத்துடனோ - இந்தச் சுரங்கங்களுக்குள் வந்தால் தெளிவாக எதையும் வெளிபடுத்த முடியாது குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே முடிவதுபோலவும் வெளியேறுவதற்கான வாயில் இருப்பதுபோலவும் தோன்றுமாறு - முடியாததுவும் - வெளியேறுவதற்கான வாயில் இல்லாததுவுமான குழப்ப வழிகள் பல அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் அருகில் போய் நிற்கும்போதுதான் அதற்குமேல் அந்த வழி தொடரவில்லை என்பது தெரியவரும். இருளும், காற்று அதிகமின்மையும் இடர் தந்த சூழ்நிலையில் குழப்பம் விளைவிக்கும் போலி வழிகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து முன்னேறினார்கள் அவர்கள்.

"புறநகரிலே எங்காவதொரு பகுதியில் போய் இந்த வழியின் மற்றொரு நுனி முடியுமென்று தோன்றுகிறது!" என்பதாக முடிநாகன் தெரிவித்தான்.

"நிச்சயமாக எனக்குத் தோன்றுகிறது - இங்கிருந்து வெளியேறிச் செல்லுகிற வழிகள் இரண்டாக இருக்கும். பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/92&oldid=490015" இலிருந்து மீள்விக்கப்பட்டது