பக்கம்:கபாடபுரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கபாடபுரம்


வழியைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னேறுவது நல்லது..." என்று சாரகுமாரன் பிடிவாதமாகக் கூறவே முடிநாகனும் அதற்கு இணங்கவேண்டியதாயிற்று.

தேடிக்கொண்டிருந்த பகுதியில் வெளியேறுகிற மறுவழி மிக அருகிலிருப்பதுபோல இருவர் மனத்திலும் ஒரு நம்பிக்கை உணர்வு வேறு தோன்றத் தொடங்கியது. பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துப் போவதில்லை. துன்பங்களின் நீண்ட வரிசைக்குப் பின்னால் நம்பிக்கை மயமாக எண்ணம் வருகிறபோதே வெற்றியும் வருகிறதென்று ஒப்புக்கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கீைக்குக் காரணமுமிருந்தது. அதுவரைகாற்றே நுழையக் காணாத சுரங்கப் பகுதியில் இலேசாக ஒரு நூலிழை காற்றுச்சிலுசிலுத்தது. அந்தப் புதிய காற்று நுழைந்த வழியை ஆவலோடு தேடினார்கள் அவர்கள். அப்படித் தேடியபோது வெற்றியின் மற்றொரு நல்வரவாக ஒரு நூலிழை ஒளிக்கதிரும் எதிரே திசை தெரியாத எங்கோ ஒரு பகுதியிலிருந்து அவர்களை நோக்கி நீண்டது. இருவருக்கும் நம்பிக்கை வந்தது.


12. அந்த ஒளிக்கீற்று

இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்துவிட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.

"மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர வேண்டுமானால் இந்த அவுணர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கவேண்டும் என்று வினாவிய இளையப்ாண்டியனுக்கு முடிநாகனிடமிருந்து விளக்கமான மறுமொழி கிடைத்தது.

"தங்கள் பாட்டனார் இந்த அழகிய புதுக் கோநகரத்தைப் படைக்கும்போது - கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வானளாவிய மதிற்கவர்களை மேலெழுப்புவதற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/94&oldid=490018" இலிருந்து மீள்விக்கப்பட்டது