பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கப்பலோட்டிய தமிழன்

களையோ, வாக்குவாதங்களையோ செய்தவர் அல்லர் வ.உ.சி!

தமிழ் நாட்டின் ஒழுக்கங்களிலும், தமிழ்மொழி இலக்கியங்களிலும், நமது முன்னோர்கள் எந்தெந்த நோக்கங்களைச் சிறந்தனவென்று பின்பற்றி வாழ்ந்து வந்தனரோ, அந்தக் குணச் சிறப்புகள் எல்லாம் குறைவறக் கொண்டவராவார்.

சங்க இலக்கிய நூல்களிலும், தமிழர் தம் பண்பாடுகளிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். தமிழனுடைய லட்சியப் பண்புகளான ஆன்மீக வழிபாடுகள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கடவுட் கொள்கைகளும் கொண்டவர்.

ஒருவரிடம் இந்தப் பண்புகளில் ஒன்றிரண்டு சற்று அதிகமாக அல்லது குறைவாக அவரவர்களுடைய இயல்புகளுக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஆனால், இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் அவன் தமிழன் இல்லை என்பது வ.உ.சி.யின் கருத்தாகும்.

நாட்டுக்காக வாழ்ந்த இந்த தேசபக்தனை நினைத்து நாமும் அவனைப் போல நாட்டுப் பற்றை வளர்த்து நாட்டுக்காக வாழ்ந்து காட்டுவோம்!