பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கப்பலோட்டிய தமிழன்

பிள்ளையின் தியாகமும் ஒரு காரணமாகும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் போது கையொலி கடலலை போல ஒலித்தது. செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரை தமிழ்நாட்டாரை விட அதிகம் புரிந்தவர்கள் வடநாட்டவர்கள் தான்!

இந்திய சுதந்திரப் போராட்ட உணர்ச்சிகளாலே அவர் பெற்ற பரிசுகள் இரண்டு! வறுமை ஒன்று மற்றொன்று நோய் வகைகள். இந்த இரண்டாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தியாக மன்னன் 1936-ஆம் ஆண்டின் போது நோய் முற்றிப் படுத்த படுக்கையாகிவிட்டார் ஏறக்குறைய நாற்பது நாட்களுக்கு மேலே படுக்கையே கதி என்று கிடந்தார் எந்தத் தமிழ் மகனும் அவரை வந்து கண்டு ஆறுதல் கூறியவனல்ல. எல்லாம், அவனவன் பெண்டு, பிள்ளை, வீடு, உணவு என்றே வாழ்ந்தான்.

மாசிலாமணிப் பிள்ளை என்ற தூத்துக்குடிக்காரர் சிதம்பரம் பிள்ளையைக் கண்ட போது, என்று வரும் நமக்கு சுதந்திரம், என்று தணியும் நமது விடுதலை தாகம் என்று சொல்லிக் கொண்டே அழுதார்.

உயிர் விடுபவர்கள் சைவ சமயிகளாக இருந்தால் சுற்றத்தார் தேவாரம், திருவாசகம் படிப்பார்கள்! இறப்பவர்கள் வைணவிகளாக இருந்தால் உறவு முறையினர் நாலாயிர திவ்வியப் பிரபந்த வகை நூல்களைப் படித்து ஆன்ம பேறு பெற வைப்பர்.

சிதம்பரம் பிள்ளை திருக்குறளையே, தமிழ் வேதமாகக் கொண்டவர். சுதந்திர உணர்வு கொண்டவர், நாடு விடுதலை பெற்றிட அயராது பாடுபட்டவராதலால், கவிமன்னன் பாரதியார் பாடல்களைக் கேட்க விரும்பினார். "என்று