பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கப்பலோட்டிய தமிழன்

செய்தியில், ‘சிதம்பரம் பிள்ளை மாசுமறுவற்ற ஒரு தேசபக்தர். கள்ளம் கபடமற்ற நெஞ்சினர். தமிழ் நாட்டார் சிலை எடுத்துப் போற்றுவதற்குத் தகுதியுடையவராவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிதம்பரனாரது இந்த சிலை எடுப்பு விழாவிற்கு அவரது அரசியல் நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பித்து அவரைப் பாராட்டிப் பேசினார்கள்.

இந்தியர் சுதந்திரம் பெற்ற பின்பு ‘ஜலப்பிரபா’ என்ற ஒரு கப்பலை மிதக்கவிட்டார்கள். அந்த விழாவில் பேசிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிதம்பரனாரின் தியாகங்களையும், ஆங்கிலேயர் ஆட்சியை அவர் எதிர்த்துப் போராடிய விந்தைமிகு வீர தீரச் செயல்களையும் போற்றிப் புகழ் உரையாற்றினார்.

தென்பாண்டி வணிகர்கள் தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டிற்கும் இடையே போக்குவரத்திற்காக ஒரு கப்பலை வாங்கினார்கள். அந்தக் கப்பலுக்கு வி.ஓ.சிதம்பரம் என்று பெயரிட்டார்கள். தென்பாண்டி வியாபாரிகள் கப்பல் ஓட்டிய சிதம்பரம் பிள்ளையை, அவரது அரிய உழைப்பை, வீரத்தை மறக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாவட்டத்திலே இருந்து திரண்டு அப்பகுதி வணிகர்கள் எடுத்த கப்பலோட்டும் விழாவிலே கூடினார்கள்.

அப்போது இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் என்ற பதவியை வகித்திருந்த, சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ராஜாஜி அவர்கள் அந்த விழாவிலே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, உணர்ச்சி பொங்க “வீரர் வ.உசிதம்பரம் வாழ்க” என்று கோஷமிட்ட போது, திரண்டிருந்த பொது ஜன வெள்ளமும் வீரர்