பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. பெரும்புலவர் சிதம்பரனார்
தமிழ்த் தொண்டு வாழ்க!

இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதற்கும் சார்பாகக் கப்பலோட்டிய முதல் வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான் என்று இன்றும் உலக வரலாறு வரம்பிட்டு வாழ்த்திக் கொண்டு இருக்கின்றது.

இந்த செயற்கரிய செயலைச்செய்த சிதம்பரம் பிள்ளையின் கடைசி நாட்கள் வறுமையிலே வாடினபோது, எந்தத் தமிழ் மகனும் அவரது வாழ்வுக்கு உதவியாகக் கை கொடுத்து உதவாமல் இருந்துவிட்டது மாபெரும் குறையாகவே இருந்தது.

அந்த தேசிய மாவீரன் சிறை மீண்டு வெளியே வந்த போது தமிழ்நாடு அவரை ‘வருக வீரனே வருக’ என்று வரவேற்று ஆதரிக்கவும் தவறிவிட்டது. அவரது செல்வாக்கும் சொல்வாக்கும் அறிந்தவர்கள் கூட அவரைக் கவனிக்காமல்