பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கப்பலோட்டிய தமிழன்

ஓதி வழிபட்டவர்! அவரும் தமிழ்த் தொண்டராக வாழ்ந்து மறைந்தார்:

முத்தமிழ் வித்தகராக விளங்கிய சிதம்பரம் பிள்ளை மதுரை மாநகர் தமிழ்ச்சங்கப் புலவராகத் திகழ்ந்தவர். தமிழ் இலக்கிய இலக்கண வித்தகர்; அவர், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்குமொழிகளிலே புலமை பெற்றவர்.

சிதம்பரனார் நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு என்ற இரண்டையும் கண்களைப் போல காப்பாற்றிய கலை இயல் வளர் நிபுணராக இருந்தார். அதனால்தான் அவரால் ஒரு நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், தத்துவஞான ஆசானாகவும் பணியாற்றும் திறனாளராக இருக்க முடிந்தது.

சிதம்பரம், 'மெய்யறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்,' தனது முதல் மனைவி நினைவாக 'வள்ளியம்மை சரித்திரம்' என்ற நூல்களை எழுதினார்: மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட புத்தகங்களில் தத்துவங்களைப் பொழிந்த நல்ல ஞானியாக நடமாடினார்!

கண்ணனூர் சிறையிலே அவர் சிறைத் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே 'மெய்யறிவு' என்ற தத்துவ நூலைச் செய்தவர் சிதம்பரனார் திருவள்ளுவரின் திருக்குறளை அமுதமாக உண்டவர். திருக்குறள் கூறும் அறங்களை எல்லாம் தொகுத்து அறத்துக்கென ஒரு வடிவ நூலாக ‘மெய்யறம்’ வடித்தவர் இந்த நூலில் திருவள்ளுவரால் கூறப்படாத பல