பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கப்பலோட்டிய தமிழன்


கப்பல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 25 ரூபாய் என்றும், நாற்பதாயிரம் பங்குகளை விற்று பத்து லட்சம் ரூபாய் சேர்ப்பது என்றும் அந்த நிறுவனம் முடிவெடுத்துப் பணியாற்றியது. பங்குதாரர்கள் மளமளவென்று சேர்ந்தார்கள். ஜனாப் ஹாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் இரண்டு லட்சம் ரூபாய்க்குரிய பங்குகளை வாங்கினார். சுதேசிக் கப்பல் நிறுவனம் தமிழர்களுக்கு மட்டுமே உழைக்கும் நிறுவனமன்று ஆசியா கண்டத்திலுள்ள அனைவருக்கும் பேதமேதும் இல்லாமல் உழைக்கும் நிறுவனமாக இருந்தது.

சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கென்று சொந்தக் கப்பல் ஏதுமில்லை. வாங்கவும் இயலவில்லை அதனால் ஷாலைன் ஸ்டீமர்ஸ் என்ற கம்பெனியிடமிருந்து கப்பல்களைச் சுதேசிக் கம்பெனியார் குத்தகைக்கு வாங்கி ஒட்டினார்கள்.

ஆங்கிலேயர்களுடைய கம்பெனியை எதிர்த்து, போட்டி வியாபாரமாக, சுதேசிக் கப்பல்கள் ஓடுவதைக் கண்ட பிரிட்டிஷ் நிறுவனத்தாருக்குப் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டது. அதனால், இந்தியக் கப்பல் நிறுவனத்தை இயங்காமல் செய்வதற்குரிய முட்டுக் கட்டைகள் என்னென்னவோ அவற்றையெல்லாம் முடிந்த வரை வெள்ளை நிறுவனம் செய்து கொண்டே இருந்தது.

ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜி பாஜ்பாய் என்பவர். அவரைப் பிரிட்டிஷ் நிறுவனம் மிரட்டியதால் சுதேசிக் கம்பெனிக்கு குத்தகைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த கப்பல்களை ஷாலைன் நிறுவனத்தார் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். நடுக்கடலில் தத்தளிக்கும் ஓட்டைக் கப்பலைப் போல சுதேசிக் கப்பல்