பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கப்பலோட்டிய தமிழன்

தேசாபிமானிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருவாரியாகத் திரள ஆரம்பித்தார்கள்.

அவ்வாறு திரண்ட மக்கள் இடையே சிதம்பரனார், சுதேசிப் பற்று, வெளிநாட்டுச் சாமான்கள் விலக்கு, தேசியக் கல்வி, மனித உரிமைகள், விடுதலையின் விளக்கங்கள், அடிமை ஒழிப்புகள் என்பன பற்றியவைகளை எல்லாம் பேசி உணர்ச்சிகளின் போர்வாட்களாக மக்களை மாற்றிக் கொண்டே இருந்தார் சிதம்பரம் பிள்ளை.

அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் சிலர் பெருமையாக மதிப்பார்கள். தமிழிலே பேசுவதை சிறுமையாகக் கருதும் காலம் அது. ஏழை மக்கள் காங்கிரசில் சேராத நேரம். அப்படிப்பட்ட காலத்தில் ஏழை மக்களைக் காங்கிரசில் சேர்த்து, அவர்களிடையே சுதந்திரம் ஏன் தேவை என்ற கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களை நாட்டின் விடுதலைப் போருக்குத் தயார்படுத்தி வந்தார் சிதம்பரம் பிள்ளை. இத்தகைய சுதந்திரக் கருத்துக்களின் பரிமாற்றத்தினால், ஏழைகளும், நடுத்தர மக்களும், காங்கிரசில் சேர்ந்தது மட்டுமல்ல; தேசாபிமானி சங்கங்களும் பரவலாகத் தோன்றிக் கொண்டே இருந்தன. இந்த சக்தியை தமிழ்நாட்டில் வளர்த்த பெருமை சிதம்பரம் பிள்ளையின் இடையறாத உழைப்பின் வெற்றியையே சாரும்.

இந்த நேரத்தில் சுப்பிரமணிய சிவா என்ற 23 வயது வாலிபர் சிதம்பரனாருடன் இணைந்தார். சிவா ஒரு தேசாபிமான வெறியர். மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு என்ற கிராம முன்சீப் மகன் அவர்! அருமையான கனல் பறக்கும் பேச்சாளர். புழுவைக் கூட புலியாக்கும் அவரது