பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. மூன்று குற்றங்கள் மீது
சிதம்பரனார், சிவா கைது

சிதம்பரனார், சிவா என்ற இருபெரும் தேசபக்தர்களின் செல்வாக்கும் மக்கள் இடையே நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் அவர்களை எப்படியும் கைது செய்வது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் அரசு வந்தது.

இந்த இருவரையும் தூத்துக்குடி நகரத்தில் கைது செய்தால், கலவரமும் கலகமும் அங்கே பரவிவிடும்; அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு மக்கள் இடையே தேசிய புரட்சிக்கு பலம் உருவாகிவிடும் என்று வெள்ளையர்கள் பயந்தார்கள். அதனால், சிதம்பரனாரையும், சிவாவையும் திருநெல்வேலிக்கு வருமாறு மாவட்டக் கலெக்டர் விஞ்ச் உத்தரவிட்டார்.

திருநெல்வேலிக்கு சிதம்பரனார் புறப்பட்டபோது அவரது நண்பர்கள் போக வேண்டாம் என்று அவரைத் தடுத்தார்கள். ஏனென்றால், கலெக்டர் விஞ்ச் எப்படியும் சிதம்பரனாரைக் கைது செய்து விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனை சிதம்பரம் பிள்ளையும் அறிவார். இருந்தாலும், கலெக்டர் அழைத்த பின்பு உடனடியாகச் செல்லாவிட்டால்,