பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

49

பதிலைக் கேட்ட கலெக்டர், ‘அப்படியானால், நீர் திருநெல்வேலி நகரை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அரசியல் கிளர்ச்சிகளில் இனிமேல் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை ஜாமீன் தர வேண்டும் என்றும் அவர் கோபாவேசமாக எச்சரித்தார்.

‘திருநெல்வேலி மாவட்டம் நான் பிறந்த மண், ஒருபோதும் அதைவிட்டு வெளியேற மாட்டேன். வேண்டுமானால் என்னைக் கைது செய்து கொள்க’ என்று சிதம்பரனாரும் கோபமுடன் பதிலளித்தார்.

உடனே, அந்த இடத்திலேயே, சிதம்பரனாரையும், சிவாவையும் கலெக்டர் உத்தரவால் கைது செய்தார்கள். சிதம்பரனார் வீட்டைச் சோதனை போடுமாறு போலீசாருக்கு கலெக்டர் ஆணையிட்டார்.

மாவீரன் சிதம்பரனாரும், சிவாவும் கைதான செய்தி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. வர்த்தகர்கள் கடைகளை அடைத்தார்கள். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தார்கள். தேசாபிமானிகளும் பொதுமக்களும் கலெக்டர் பங்களாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு எதிர்ப்புக் கோஷமிட்டார்கள். பொதுக் கூட்டங்களைக் கூட்டி கலெக்டரின் ஆணவப் போக்கை எதிர்த்துக் கண்டனம் செய்து முழக்கமிட்டார்கள். நெல்லை நகர் முழுவதும் ஒரே கலவரமும் - குழப்பமுமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

நகரிலே அமைதியை ஏற்படுத்த போலீஸ்படை குவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நகர் பகுதி முழுவதிலும் கூடி சிதம்பரனாரையும், சிவாவையும் விடுதலை செய்,