பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

55

தேசாபிமானத்துடனும் நெல்லைச் சீமையிலே சுதந்திர போர்ப் பரணிபாடிய சிதம்பரனார், கொலையும் - கொள்ளையும் செய்து பழக்கப்பட்ட கொடியோர்களுடன் தண்டனையை அந்தமான் தீவிலே அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார் நீதிபதி பின்ஹே.

சிதம்பரனாருக்கு அப்போது வயது முப்பத்தைந்து; சிவாவுக்கு இருபத்தைந்து வயது. சிதம்பரனார், தனது தாய் தந்தையரையும், மனைவியையும், இரண்டு மகன்களையும் பிரிந்து சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது கண்டு அவரது குடும்பமே கவலையடைந்தது.

சிதம்பரனாரின் சகோதரரான மீனாட்சி சுந்தரம் தனது தமையனுக்கு வழங்கப்பட்ட கொடுமையான தீர்ப்பைக் கேட்டு மூளை குழம்பியவரானார். அந்த சகோதரன் தனது வாழ்நாள் முழுவதும் பைத்தியம் பிடித்தவராகவே மாறி, 1943-ஆம் ஆண்டு இறந்து போனார்.

விடுதலைப் பித்தர் சிதம்பரம் பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு கவலைப்படவில்லை. சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போது, கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் மாசிலாமணியின் முகத்தைப் பார்த்து, தம்பி மாசிலாமணி வருந்தாதே. இருக்கிறது உயர்நீதி மன்றம், அங்கே வழக்கை அடித்துத் தள்ளிவிட்டு வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறியபடியே சிறைக்குச் சென்றார் சிதம்பரம்.

சிதம்பரனார் சிறைத் தண்டனை பெற்ற அதே வாரத்தில், வடநாட்டில் திலகர் ‘கேசரி’ என்ற பத்திரிகையில் ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து எழுதினார் என்பதற்காக, குற்றம்