பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

63

அளவிலா துன்பங்களை அனுபவித்ததுடன் இல்லாமல், சமூக விரோதக் கைதிகள் தன்னைப் போலவேதான் அரசியல் கைதிகளும் என்றெண்ணி சிதம்பரனார், சிவா போன்றவர்களை அவமரியாதையாக நடத்திடவும், கேவலமாக அவர்களை மதிக்கவும் செய்தார்கள்.

நல்ல உணவுகளை வீட்டில் உண்டு வந்த சிதம்பரனார் போன்றவர்களுக்கு சிறை உணவான கேழ்வரகு, கூழ், களி போன்ற உணவுகள் உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவரது உடல் நாளுக்கு நாள் உருக்குலைந்து வரலாயிற்று. ஆறே மாதங்களில் 27 பவுண்டுகள் உடல் எடை குறைந்தது என்றால், அவர் ஆறாண்டுக் காவலை எப்படிக் கழித்திருப்பார் என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா?

இவ்வாறு உடல் மெலிந்த சிதம்பரனாரை சிறை டாக்டர் சோதனை செய்த பின்பு, சிறை அதிகாரிகளை அவர் எச்சரித்துப் புகார் கூறியதனால்தான், சிதம்பரனாருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது.

சிறையில் அவரது கால்களுககு பெரும் இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டன. முரட்டுத் துணிகளாலான மேல்சட்டை, மொட்டை அடிக்கப்பட்ட தலை, என்று அவருக்கு விடுதலை என்பதைக் குறிக்கும் கட்டையைத் தாலி போல கழுத்தில் தொங்கவிடப்பட்டது.

உடல் உருக்குலைந்த ஒரு வக்கீலை, சிறையதிகாரிகள் கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். வழக்குரைஞர் பணி அவரது பரம்பரைக்கு வாழையடி வாழையாக வந்த