பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கப்பலோட்டிய தமிழன்

நிர்வாகிகள் கேட்டு அவர் பெற்றோரை நெருக்கினார்கள் சிறையிலே உள்ள சிதம்பரனார் என்ன செய்வார்?

இந்த நெருக்கடிக்குக் காரணமறிந்த சிதம்பரம் பிள்ளை, சுதேசிக் கம்பெனியின் சட்ட ஆலோசகரான சேலம் சி.விஜயராகவாச்சாரியாருக்குக் கடிதம் மூலமாகக் குறிப்பிடும் போது, கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பங்குதாரர்கள் ஏற்பதே நியாயம். அவர்கள் மறுப்பார்களானால், நானே கடன்களைக் கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்தார் இந்தத் துன்பங்கள் அவரை நெருக்கி வேதனைப்படுத்தினாலும் அதற்காக அவர் வருந்தவில்லை.

ஒவ்வொரு நாளும் சிதம்பரனார் சிறையில் அதிகாரிகளுடன் தனது சுயமரியாதைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்தது. ஜெயில் அதிகாரி ஒரு நாள் சிறையைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அப்போது சிதம்பரனார் திடீரென்று சிரித்து விட்டார் அதைக் கண்ட அதிகாரி ஏன், சிரிக்கிறாய்? என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். அதற்கு அவர், சிரிக்காமல் என்ன செய்ய சொல்கிறீர்? அழுவதா? என்று கேட்டுவிட்டார் கோபம் கொண்ட அதிகாரி இந்த விவகாரத்தை ஜெயில் சூப்ரெண்டிடம் புகார் செய்தார். சிரித்த குற்றத்திற்காக மேலும் 2 வாரம் சிறை தண்டனையை சிதம்பரம் பெற்றார்.

வேறோர் நாள் சிறை அதிகாரி, சிதம்பரம் பிள்ளையைத் தோட்டி வேலை செய்யுமாறு பலாத்காரமாக வற்புறுத்தினார். உயிரே போனாலும் அந்த வேலையைச் செய்யமாட்டேன் என்று கண்டிப்பாக அவர் மறுத்துவிட்டார் சிதம்பரத்தின்