பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. வ.உ.சி. தண்டனைக்குப் பழி
வாஞ்சி ஆஷ்துரையைச் சுட்டார்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த விஞ்ச் என்ற வெள்ளைக்காரருக்கு உதவிக் கலெக்டராக இருந்தவர் ஆஷ்துரை உதவிக் கலெக்டராக இவர் இருந்த போது காங்கிரஸ் தேச பக்தர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளைச் செய்தவர் மாவட்டம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பண்ணையார்கள், கல்விமான்கள் கல்லார்கள் புகழ்மிக்க பெரும் செல்வாக்கு பெற்றவர்கள் அனைவரிடமும் கெட்ட பெயரும் பழி பாவங்களும் ஏற்றிட்ட ஓர் அதிகாரியாக விளங்கியவர் ஆஷ்துரை:

சுதேசிக் கப்பல் கிளர்ச்சி அறவழியில் நடந்ததை மறவழியில் மாற்றியதே வெள்ளைக்காரர்களான விஞ்ச் துரையும் ஆஷ் துரையும் தான் அந்த அளவுக்கு அந்த இரு துரைமார்களின் ஆணவம் ஆதிக்கம் இனவெறி ஆட்சி ஆதிக்கம் ஆகியவை இருந்தன.

அதே நேரத்தில் இந்த இரு துரைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு போலீசார் செய்த கொடுமைகளை பிண வீழ்ச்சிகளை படுகாயப் படலங்களைப், பொதுமக்களும் மறக்காமலே இருந்தார்கள் என்பதும் வேறோர் காரணமாகும்.