பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கப்பலோட்டிய தமிழன்

அறவழி வெற்றியைத் தராது; மறவழிதான் அதாவது ஆயுதம் ஏந்தும் போராட்டம்தான் வெற்றி தரும், வெள்ளையர் கொடுமைகளைப் பொறுக்க முடியாது என்று நம்பிய பொதுமக்கள் ஒரு சிலரின் தவறான எண்ணமும் இன்னொரு காரணமாகும்.

ஆனால், சிதம்பரனார் இத்தகையோர் போக்கை என்றுமே ஆதரித்ததில்லை சுதந்திரம் பெறுவதில் தீவிரவாதம் காட்டுவாரே தவிர அதற்காக வன்முறைகளை என்றுமே அவர் பிரயோகித்ததே இல்லை.

ஏனென்றால் வடநாட்டிலே இந்த ஆயுதப் புரட்சியை திருநெல்வேலிக்கு முன்னமேயே புரட்சிவாதிகள் ஒத்திகை பார்த்துவிட்டனர். அதாவது கிங்ஸ்ஃபோர்டு என்ற நீதிபதியைக் கொலை புரியும் முயற்சியில் குறிதவறி கென்னடி என்ற ஒரு வெள்ளைக்காரப் பெண்ணையும் அவருடைய மகளையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டனர். இந்த துயர நிகழ்ச்சி 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளன்று பீகார் மாநிலத்திலே உள்ள முஜபர்பூரில் நடந்தது. இக்கொலைக்குக் காரணம், குதிராம்போஸ் என்ற ஓர் இளைஞன் அவன் தூக்கிலிடப்பட்டான்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘தேசாபிமானிகள் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்ததைப் போல பாண்டிய நாட்டில் வீர இளைஞர்கள் ஒன்று கூடி, அபிநவ பாரத சங்கம் என்ற ஓர் ரகசியமான சங்கம் அமைக்கப்பட்டது.

இவர்கள் இந்திய விடுதலைக்காக தமது உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணிக்க சபதம் ஏற்றுக்