பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

73

அக்கடிதங்களுள் ஒன்றில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை கடுந்தண்டனை பெறக் காரணமாக இருந்தவர்களுள் ஆஷ்துரை தான் முக்கியமானவர். ஆகையால், அவரைச் சுட்டுவிட்டேன்” என்று எழுதியிருந்தார். ஆஷ் கொலைக்கு பிறகும் நடைபெற வேண்டிய புரட்சிகளைப் பற்றிய கடிதங்களும் அவரிடம் இருந்தன.

ஆஷ்துரை கொல்லப்பட்டதைக் கேட்டு சிதம்பரனார் திடுக்கிட்டார். அதிர்ச்சியடைந்தார். எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியுள்ளவர்கள் இளைஞர்கள். அவர்கள், தங்கள் வாழ்வை இவ்வாறு பலியிட்டுக் கொள்வதை சிதம்பரம் பிள்ளை விரும்பவில்லை. பழிக்குப் பழி, வன்முறை, ஆயுதப் போராட்டம் போன்ற செயல்களால் மட்டுமே வெள்ளையர்களை நமது நாட்டை விட்டு விரட்டி விட முடியாது. வீணாக நமது இளைஞர்கள் இன்னுயிரை இழக்கின்றார்களே என்று சிதம்பரனார் மிகவும் வருத்தப்பட்டார்.

ஆஷ் சுடப்பட்ட படுகொலைக்குப் பிறகு, போலீசார் ஒவ்வொரு மாகாணத்திலும் புலன் விசாரணை செய்தார்கள். கல்கத்தா நகரில் இந்தக் கொலை சம்பந்தமாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி ஒருவர். மற்றொருவர் தென்காசியைச் சேர்ந்த டி.என். சிதம்பரம் பிள்ளை என்பவராவார்.

இவர்கள் ‘அபிநவ பாரத சங்கம்’ போன்ற இரகசிய சங்கங்களைத் தோற்றுவித்து, புரட்சியை உருவாக்கச் சதி செய்கிறார்கள் என்று போலீசார் அவர்கள் மீது குற்றம்