பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12. கல்கத்தாவில் காந்தி திட்டம் :
வ.உ.சி.மறுப்பும் - எதிர்ப்பும்!

மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தம் என்ற திட்டத்தை எதிர்த்திட காந்தியடிகள் கொண்டு வந்த ஒத்துழையாமை என்ற தீர்மானத்தைப் பரிசீலனை செய்வதற்காக 1919-ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒரு காங்கிரஸ் சிறப்புக் கூட்டம் நடந்தது - மாநாடல்ல! மகா சபையுமன்று!

அந்தக் கூட்டத்தில், சாத்வீகத்தையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சட்டசபைகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் பகிஷ்காரம் செய்வது என்ற பிரச்சனைகளைப் பற்றி முடிவெடுப்பதற்காக இந்தியத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள்.

இந்தக் கல்கத்தா விசேஷ காங்கிரசுக்குச் சென்னையிலே இருந்து ஏராளமான பிரதிநிதிகள் சென்றார்கள். தென்னாட்டுத் திலகரான சிதம்பரம் பிள்ளையும், நாமக்கல் நாகராஜ ஐயர், ஜனாப்பீர் பாட்சா சாஹிப், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வரதராஜ முதலியார், ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், சேலம் விசயராகவாச்சாரியார், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலர்