பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கப்பலோட்டிய தமிழன்

பகிரங்கமாக ரயில் வண்டி பெட்டி ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கி வாக்கு சேகரித்தார்.

கவிஞர் பிள்ளையை இவ்வளவு உயர்வாகப் பாராட்டி விட்டு, என்ன புலவரே உமது ஓட்டு எனக்குக் கிடைக்கும் அல்லவா? என்று நெருக்கினார் சிதம்பரம் - ராமலிங்கம்

ஆனால், ராமலிங்கம் பிள்ளை ஏதும் பேசாமல் ஊமை போல இருந்ததைக் கண்ட சிதம்பரம் பிள்ளை, என்னுடைய கருத்தில் உமக்கு உடன்பாடு இல்லையா? என்று மீண்டும் கேட்டார்.

ரயில் வண்டி ஓடும் ஓசைதான் கேட்டதே தவிர, நாமக்கல் பிள்ளை ஓசை ஏதும் எழுப்பாமலே மெளனமாக இருந்தார்.

நான் சொல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையானால், கூசாமல் கூறுங்கள். உங்களைக் கசக்க வேண்டும் என்று நான் எண்ணமாட்டேன் என்று சிதம்பனார் மீண்டும் நாமக்கல்லாரைக் கேட்டபோது, ‘நான் காந்தியடிகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறி ஏற்கனவே வாக்களித்து விட்டேன்’ என்றார்.

‘சபாஷ் புலவரே! உங்கள் உண்மைத் தன்மையை நான் மிகவும் போற்றுகின்றேன். மனமார வாழ்த்துகிறேன். நீங்கள் யாருக்கு வாக்களித்து விட்டீர்களோ, அவர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பது மிகவும் உயர்வான நோக்கம். அது தான் சரி. நான் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்’ என்று சிதம்பரம் பிள்ளை அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார்.