பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

85

இந்த நிகழ்ச்சி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையின் நேர்மையான குணச்சிறப்பை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கும் பண்பாக உள்ளது அல்லவா?

இத்தகைய மனித நேயம் கொண்டவரின் போர் முறைப் பண்புக்கு ஒரு நிகழ்ச்சி வாய்த்ததாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தனது தேசபக்தர் மூவர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்க விவரம் வருமாறு :

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்த போது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள்.

கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் ஸ்பெஷல் வண்டி புறப்படும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். இதைக் கேட்டதும் ஸ்பெஷல் வண்டியிலே உள்ள தேசபக்தர்களுக்கு கோபம் வந்து விட்டது.

‘என்ன அந்த மெயில் வண்டிக்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னால் புறப்பட்ட எங்களை அனாவசியமாக இங்கே மூன்று மணிக்கு மேல் காக்கப்போட்டு, எங்கள் வண்டிக்கு முன்னால் மெயிலைப் போக விடுவது என்றால், இதை விட எங்களுக்கு அவமதிப்பு இன்னும் என்ன இருக்கிறது?’ என்று.