பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கப்பலோட்டிய தமிழன்

“காந்தியடிகளின் ஒத்துழையாமைத் தீர்மானத்தை நான் மட்டும் எதிர்க்கவில்லை. விசேஷ மகா சபையிலே கூடியுள்ள திலகரைப் பின்பற்றும் அவரது வாரிசுகள் என்போர் எல்லாருமே தீவிரமாக எதிர்க்கின்றார்கள். அந்த எதிர்ப்புக்கு காரணம் பட்டம் பதவிகளை விட்டு விட வேண்டுமே என்பதோ, சட்டத்தை எதிர்த்துக் கஷ்டப்பட வேண்டுமே என்பதோ அல்ல. அரசியல் சதுரங்கத்தில் சண்டையில் சத்தியத்தையும், அகிம்சையையும் கட்டாயமாக்கக் கூடாது” என்பதே.

சத்தியத்தையும் சாத்வீகத்தையும் அப்படிக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்தால், தேசத்தில் ஆண்மையும் தைரியமும் அடியோடு அழிந்தே போகும் என்றே அப்போது தலைவர்கள் நினைத்தார்கள். அதல்லாமல் போராட்டங்களில், அது அரசியல் போராட்டமானாலும் சரி அல்லது அன்னியப் போராட்டமானாலும் சரி - ‘சாம, பேத, தான, தண்டம்’ என்று சொல்லப்படுகிற நான்கு வித உபாயங்களையும் சமயத்துக் கேற்றபடி பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், வெறும் சத்தியம் சாந்தம் என்ற வைதீக மனப்பான்மை உதவாது என்பது திலகரைப் பின்பற்றுவோர்களுடைய எண்ணமாகும்.

சாம பேத, தான, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களைப் பற்றிக் கேட்டுக் கேட்டுச் சொல்லிச் சொல்லிப் பரம்பரையாகப் பழகிவிட்ட பலருக்கும் இந்த வாதம் மிகவும் சரியானதாகத் தோன்றியதால் அந்த எதிர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

‘எங்கள் மன்னன் திலகர் இறந்து விட்டார் என்பதால், அவரது கொள்கைக்கு எதிராக இந்த ஒத்துழையாமை