பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

91

தீர்மானத் திட்டத்தைக் காந்தியடிகள் கொண்டு வந்துள்ளார். எங்கள் அரசியல் குரு திலகர் இருந்திருந்தால் இந்தப் பேடித்தனமான தீர்மானத்தைக் கொண்டு வர நமது காந்தி துணிவாரா?

திலகர் பெருமான் தேசத் தொண்டாற்றியதில் உண்மையிலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தீவிரவாதத் தேசத் தொண்டுதான் நமது பாரத பூமிக்குரிய சுதந்திரத்தை வெற்றிக்கரமாகத் தேடித் தரும் என்ற சத்திய உணர்வுடையோர், ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஓட்டளிக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் என்று கர்ஜனையிட்ட சிதம்பரம் பிள்ளை அமர்ந்துவிட்டார்.

மதிக்கத் தகுந்த காங்கிரஸ் தலைவர்களுள் மிகப்பெரும் பகுதியினரும் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்றாலும், ஏராளமான ஓட்டுகளால் காந்தியடிகளுடைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித சுபாவத்துக்கு மாறானது என்றும், நடைமுறைக்கு ஒத்துவராதது என்றும், இன்று நாம் அனுபவத்தில் காண்கின்ற அந்த அஹிம்சை தீர்மானம், சிதம்பரம் பிள்ளை போன்ற அறவாணர்களால் எதிர்க்கப்பட்ட பிறகும் கூட, காந்தியடிகளது ஒத்துழையாமை தீர்மானம் அதிகப்படியான வாக்குகளால் அந்த சிறப்புக் கூட்ட ஆலோசனை அரங்கில் நிறைவேறிய ரகசியம் என்ன என்பதை ‘தேசபக்தர்கள் மூவர்’ என்ற கட்டுரையில் இதோ நாமக்கல் கவிஞர் விளக்குகிறார். படியுங்கள்.

“மனித சுபாவத்தில் மறைந்து கிடக்கிற ஆன்ம உணர்ச்சி எப்போதும் அகிம்சையைத்தான் நாடுகின்றது. ஆனால்,