பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. அரசியல் கவரிமா வ.உ.சி.
மக்கள் கண்ணில் மறைந்தார்!

காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பகிரங்கமாக, வட இந்திய எல்லாப் பிரபலத் தலைவர்களது முகத்துக்கு நேராக, சவால் விட்டு மறுத்தும், எதிர்த்தும் தோற்கடிக்க அரும்பாடுபட்டார் சிதம்பரம்பிள்ளை. ஆனால், காந்தியடிகள் இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட கப்பலோட்டிய வீரசிங்கத்தை அவர் பதிலுக்குப் பதிலாக எதிர்த்தவரும் அல்லர், வெறுத்தவருமல்லர்.

சிதம்பரம் பிள்ளையின் தியாகங்களை காந்தியடிகள் மதித்தவர் போற்றிப் புகழ்ந்து மனமார அவரது அஞ்சாமைப் பண்பை அவர் வாழ்த்தியவர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் இந்தியர் உரிமைகளுக்குப் போராடியபோது திலகர் பெருமானின் வீரத் திலகமாகத் திகழ்ந்த சிதம்பரனார், கடிதங்கள் எழுதி காந்தியடிகளைப் பாராட்டிப் பரவசப்பட்டவர்!

ஆங்கிலேயர்களின் இந்தியப் பொருளாதாரச் சுரண்டலை அகிம்சை வழியாகப் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷனின் ஆணிவேரின் ஆழத்தை அசைத்துப் பறித்துக் கொண்டிருந்த