பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கப்பலோட்டிய தமிழன்

அழுகின்ற குழந்தைகள் தின்பண்டத்தின் சிறுபகுதியை ஏற்காமல், எல்லாவற்றையும் முழுவதுமாகக் கொடு என்று தாய் தந்தையிடம் கோபித்துக் கொள்ளும். இதே பண்புடையதே ஒத்துழையாமை என்றார். பிறகு அரசியலில் மானம் தேவை ஒரு கொள்கையை நிலைநாட்ட தொண்டர்கள் மானிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலும் மானஸ்தர்களின் அரண்மனை வாசலாக இருக்கும் என்று கூறிய சிதம்பரனார், காந்தியின் அகிம்சைக் கொள்கையின் எதிர்ப்பு என்ற மானஸ்தனாகவே காங்கிரஸ் மகா சபையை விட்டு மன விரக்தியோடு விலகி வெளியேறிவிட்டார். ஆனாலும், காங்கிரஸ் தேசியத்தின் சுதந்திரத்திற்காகவே தனியே, வெளியே நின்று பாடுபட்டார்

1927-ஆம் ஆண்டு சேலத்தில் காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாடு நடந்தபோது சிதம்பரம் பிள்ளை மீண்டும் தான் வளர்த்த காங்கிரசிலேயே சேர்ந்து தொண்டாற்றினார். மாநாட்டின் தலைமையுரையில் பேசும் போதுகூட, அதாவது ஏழாண்டு இடைவெளி விட்டுக் காங்கிரசிலே இணைந்தும் கூட, “ஒத்துழையாமை இயக்கம் எனது கொள்கைக்கு மாறுபட்டது. அந்த இயக்கம் இப்போது முடிந்துவிட்டது. அதனால் ஏழாண்டுகள் அரசியலிலே விலகியிருந்த என்னை, நண்பர்கள் மீண்டும் அழைத்துவந்து தலைமை ஏற்கப் பணித்தார்கள். தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளருமே தவிரக் குறையாது” என்ற வீரத் தமிழ்ப் பெருமகன் தனது கொள்கைப் பற்றின் வைர உறுதியை மக்களுக்கு விளக்கிக் காட்டினார். ஆனால், அந்த மாநாடு முடிந்த பின்பு மீண்டும் காங்கிரஸ் மகா சபையின் கோஷ்டிக் கொந்தளிப்பைக் கண்டு தானே மனமுடைந்து மீண்டும் விலகி