பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

97

விட்டார். அதாவது காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் தொடர்புறாமலே இருந்துவிட்டார்.

சிதம்பரம் அரசியலிலே மட்டும் மாவீரராக இருக்கவில்லை. தமிழ்த் தொண்டிலும் அவர் மாவீரராகவே பணியாற்றினார். அரசியலில் ஈடுபடாமல், தானுண்டு - தமிழ் உண்டு என்ற நிலையில், அற்புதமாக ஓர் ஆராய்ச்சிப் பெரும்புலவராகவே விளங்கினார். மேடையேறி சிதம்பரம் பேசுகிறார் என்றால் சிங்கம் ஒன்று வெண்கலக் குரலெடுத்து கர்ஜனை செய்தது போல விளங்கி, மக்களை மெய்சிலிர்க்க வைப்பவரானார்.

சிதம்பரனார் சிறந்த கவிஞர் பெருமானாகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய கடிதங்கள், சிறை வாழ்க்கைக் குறிப்புக் கவிதைகள் யாவுமே சொற்சுவை, பொருட்சுவை உடையவை. இங்கிலீஷூம், தமிழ் மொழியும் தெரிந்த இரட்டை மொழிப் புலவராக இருந்தார். அவர் எழுத்துக்களது அனுபவம் ஒவ்வொன்றும் படிப்போரின் மனதை மயக்குபவை மட்டுமன்று, உருக்குபவையும் கூட.

1935-ஆம் ஆண்டில், பீகார் காந்தி என்று அழைக்கப்பட்ட பாபு ராஜேந்திரப் பிரசாத் தூத்துக்குடிக்கு வந்தபோது, நேராக அவர் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் வீட்டுக்குச் சென்றார். அன்று மாலை தூத்துக்குடி நகரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை வாழ்கின்ற தூத்துக்குடிக்கு வரும் பேறு எனக்கு கிடைத்தது. அந்த வீரப் பெருமகன் சிறை சென்றது கண்டு மனம் உருகியவன் நான். எனது நாட்டாபிமானம் மேலும் அதிகமாக, ஆழமாக வளர்வதற்கு தேசபக்தர் வ.உ.சிதம்பரம்