பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், தமிழர் தம் வாழ்வில் கொள்ளத்தக்க விழுப்பொருள்கள் இவை எனத் தன் காப்பியத்தில் வரும் பாத்திரங் களைக் கொண்டு அவன் விளக்கியதும், அறிஞர்கள் அறிவிக்க நாம் அறிந்தனவே. சென்னைக் கம்பன் கழகம், 1984ஆம் ஆண்டு ஜூலை 18, 19 தேதிகளில் ஏவி.எம். இராஜேசுவரி கல்யாண மண்டபத்தில், பேராசிரியர் அ. ச. ஞான சம்பந்தனார் அவர்களைக் கொண்டு, அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவுகள் தொடரில் முதல் நினைவுச் சொற்பொழிவினை 'கம்பன் - புதிய பார்வை’ என்னும் தலைப்பில் நிகழ்த்திற்று. அச் சொற்பொழிவினைச் செவி வாயாக, நெஞ்சு களனாகக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து பாராட்டிய வர்கள் பலர். அனைவருடைய பாராட்டையும் பெற்ற சொற் பொழிவை நூல் வடிவாக்கி எமது பதிப்பாக வெளியிட்டு தமிழ் ஆர்வலர்கட்கு வழங்க அவாவி, அறிஞர் பெருமகன் அ.ச.ஞா. அவர்களை அணுகிய