பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv பொழுது முழு மனத்துடன் இசைவு தந்தார். அன்னார்க்கு எங்கள். நன்றி. - இலக்கியக் கலை (1953) எனும் நூலை ஆக்கியும், கம்பன் - கலை என்ற தலைப்பில் 'இராவணன் - மாட்சியும் வீழ்ச்சியும் முதலாய பல நூல்களை அமைத்தும், தமிழ் கூறு நல்லுலகில் தனக்கெனத் தனி இடம் வரைந்துகொண்ட சீரிய சிந்தனையாளர், எழுத்தாளர், கேட்டார்ப் பிணிக்கும், வேட்பவே மொழியும் சொற்பொழிவாளர், ஆய பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனார். இந்நூற்றாண்டின் நாற்பதுகளில் பெருஞ் சிறப்பெய்திய 'பெருஞ்சொல் விளக்கனார் அரசங்குடி, சரவணனார் அருந்தவப் புதல்வர். (தந்தை அறிவு மகன் அறிவு அன்றோ?) இத்தகைய பெருமகனார்க்கு எங்கள் நெஞ்சு நேர் நன்றிகள் என்றும் உரியன ஆகும். - கங்கை புத்தக நிலையத்தார்